இவ்வாறான நிலையில் தற்போது இப்பகுதிகளில் உள்ள அனைத்து வயல்களிலும் நிறைய மாடுகள் கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் மேய்ச்சலுக்காக சுற்றித் திரிவதால் உளுந்து பயிர்களை மேய்ந்து விடுகின்றன. இதனால் இந்த விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் கிராம மக்கள் நிறையகால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு கால்நடைகளை வளர்ப்போர் மேய்ச்சலுக்கு விடும்போது அவை கொள்ளிடக் கரை பகுதிகளிலும் மற்றும் விவசாய வயல்களிலும் மேய்ந்து வருகின்றன.
மேய்ச்சலுக்கு வரும் பலமாடுகள் திரும்பி ஓட்டிச் செல்ல ஆள் இல்லாமல் பல நாட்களாக வீடுகளுக்குத் திரும்பாமல் இரவு பகல் என பல இடத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது உளுந்து, பயிர் தண்ணீர் இல்லாமல் வறட்சியான நிலையில் இருந்து வரும் போது இப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள் உளுந்து பயிர்களை சேதப்படுத்தி வயல்களில் மேய்ந்து வருகிறதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மாடுகளை வளர்ப்போர் அதனை உடனிருந்து மேய்ந்த பிறகு கையோடு தங்கள் தங்கள் வீடுகளுக்கு ஓட்டிச் செல்ல வேண்டும் என்றும் நெல்லில் ஏற்படும் நஷ்டத்தை உழுந்து பயிர்களிலேயாவது ஒப்பேற்றலாம் என்று நினைக்கும் போது இப்படி வயல்களில் சுற்றித் திரியும் மாடுகளால் உளுந்து பயிர் விளைந்து பலன் தருவது கேள்விக்குறியாகிறது. தற்போது தங்கள் வயல்களில் மேய்ந்த மாடுகளை சிறை பிடித்து கோவில் வளாகத்தில் வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாடு வளர்ப்போர் தகுந்த முறையில் மாடுகளை பராமரித்து, விவசாயத்தை பாதிக்காமல் இருக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment