கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி அருகில் அகரம் ஊராட்சிக்கு பகுதியான பள்ளி நீர் ஓடை கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்டு தீ விபத்தில் சுந்தரமூர்த்தி சிவகாமி தம்பதியினரின் வீடு முற்றிலுமாக எரிந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி தேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ப.சிவக்கொழுந்து அவர்களின் ஆலோசனைப்படி கடலூர் வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் S.ராஜாராம் அவர்கள் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் ரூபாய் 5000 பணம் உதவி வழங்கினார்.
இதில் தேமுதிக குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் K.P.R.சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.சுமோசுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் A.T.C.வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் D.பெருமாள் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் வேணுகோபால், பொருளாளர் ஜெயபிரகாஷ் , ஒன்றிய துணைச் செயலாளர் ஜெய்சங்கர் , ஊராட்சி செயலாளர் பிரபாகரன் , கிளை கழக செயலாளர்கள் கண்ணன், அர்ஜுனன் கோதண்டபாணி உள்ளிட்ட தேமுதிக கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.

No comments:
Post a Comment