புவனகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வதுபிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 February 2024

புவனகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வதுபிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.


கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.  மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன், கழக செய்தி தொடர்பாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளருமான கோவை சத்யன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேரூரையாற்றினார்கள்.

புவனகிரி எம்எல்ஏ  அருண்மொழிதேவன் பேசும்போது, நீட் தேர்வை விலக்குகின்ற வரை கவர்னர் ஒப்புதல் தருவார்எனகாத்துக் கொண்டிராமல், அவரது ஒப்புதல் இல்லாமலேயே கோர்ட்டுக்குச் சென்று அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்து ஏற்கனவே ஆண்டுக்கு சுமார்10 மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையை மாற்றி ஆண்டுக்கு 500 மாணவர்கள் வரை மருத்துவத்தேர்வில் வெற்றி பெற வைத்தது எடப்பாடியார் ஆட்சியின் சாதனை என்று கூறினார். 


கோவை சத்யன் பேசும்போது தற்போது தமிழகம் போதை கலாச்சார நகரமாக மாறிவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது, அதிமுக ஆட்சியின் பயனுள்ள திட்டங்களான மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு தாலிக்குத்தங்கம் இன்னும் பலதிட்டங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது என்றும் திமுக ஆட்சியின் குறைபாடுகளைப் பற்றிப்பேசினார். இந்தக்  கூட்டத்தில் புவனகிரி நகரச் செயலாளர் செல்வகுமார், கீரப்பாளையம் கிழக்குஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், புவனகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், புவனகிரி ஒன்றிய ஊராட்சி செயலர் ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் மணிகண்டன், கீரப்பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் கருப்பன், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகுமணி, கடலூர்  மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் வீரமூர்த்தி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என பெருந்திரளான கூட்டத்தினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முடிவில் மாற்றத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

*/