காட்டுமன்னார்கோயிலில் தமிழகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2024

காட்டுமன்னார்கோயிலில் தமிழகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள சீரணி அரங்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளரும், காட்டுமன்னார் கோவில் முன்னாள் எம்எல்ஏவுமாகிய முருகுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டச்செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய கே.ஏ.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் தமிழக அதிமுக அமைச்சர் செல்வி ராமஜெயம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் கே எஸ் கே பாலமுருகன் ஆகியோரும் வருகை தந்தனர்.

     
அதிமுகவின்  இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள்தமிழக அதிமுகவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவைகைச்செல்வன் சிறப்பு பேச்சாளராக பங்கு கொண்டு சிறப்புரையாற்றினார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே பாண்டியன் பேசும்போது இன்றைய ஆட்சியில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் என்னவெல்லாம் இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை என்று கூறி, புரட்சித்தலைவியின் ஆட்சியில் கொண்டு வந்த  நல்லபல திட்டங்களை நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டிப் பேசினார்.
     

சிறப்பு பேச்சாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசும்போது எம்ஜிஆரை தரக் குறைவாகப் பேசிய திமுக வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை வன்மையாககண்டித்து, அண்ணாவால் பாராட்டப்பட்ட மற்றும் கலைஞர் முதன் முதலில் முதல்வராக க்காரணமாக இருந்த எம்ஜிஆரை, வரலாற்றை மறந்து விட்டு விமர்சித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று காட்டமாகக் குறிப்பிட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றபோது ஜனாதிபதி மாளிகையின் வழக்கத்தை மாற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியே ஜெயலலிதாவை வாசல் வரை வந்து வரவேற்ற நிகழ்வை குறிப்பிட்டு இது புரட்சித் தலைவியின் ஆளுமையை குறிக்கும் நிகழ்வு என்று சிலாகித்துப் பேசினார்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் , மின்சார சலவைப் பெட்டி போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்கடலூர் கிழக்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்களும் மற்றும் நகரச் செயலாளர், கிளைக் கழக செயலாளர்கள், அதிமுகவின் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என மிகத் திரலான கூட்டத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/