தீய சக்தி திமுக, துரோக சக்தி பழனிசாமிக்கு முடிவுகட்ட அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் - டிடிவி தினகரன் பேச்சு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 February 2024

தீய சக்தி திமுக, துரோக சக்தி பழனிசாமிக்கு முடிவுகட்ட அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் - டிடிவி தினகரன் பேச்சு.


அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட சட்டமன்ற பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி அருகே இந்திரா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, மோகன் ,சக்திவேல் முருகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பேசுகையில் மூன்று ஆண்டு காலம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செயலற்ற ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.


அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை விட மிஞ்சும் அளவிற்கு திமுக ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது எல்லா துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது, திமுக சிறுபான்மையின் மக்களை ஏமாற்றி வருகிறது அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது ஆசிரியர்களை ஏமாற்றி வருகிறது.


கொரோனா காலத்தில் பணி மேற்கொண்டு வந்த தற்காலிக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து அவர்களை ஏமாற்றும் ஆட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறார்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறி அவர்களையும் ஏமாற்றி வருகின்றனர்.


பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இருக்கும் பலத்தில் மாபெரும் வெற்றி பெறும் என்று பகல் கனவு காண்கிறார்கள், வரும் தேர்தலில் தீய சக்தி திமுகவும், துரோகம் செய்த எடப்பாடி பழணிசாமியை விட வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைக்கும் என பேசினார். 


- செய்தியாளர் வினோதினி நெய்வேலி.

No comments:

Post a Comment

*/