வீராணம் ஏரியில் ஷட்டரை தாங்கி நிற்கும் தூணில் ஏற்பட்டவிரிசலை சரி செய்ய கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 February 2024

வீராணம் ஏரியில் ஷட்டரை தாங்கி நிற்கும் தூணில் ஏற்பட்டவிரிசலை சரி செய்ய கோரிக்கை.


கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் முக்கிய தண்ணீர் வெளியேற்றும் மதகான விஎன்எஸ்எஸ் மதகு அமைந்துள்ளது. இந்த மதகு  பூதங்குடி பகுதியில் அமைந்துள்ளது. இதன் வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்படுவது வழக்கம். மேலும் உபரி நீரும் இதன் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மதகில் ஷட்டரை தாங்கி நிற்கும் தூண்களில்  விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த விரிசல் பல மாதங்களாக இருந்து வருகிறது. இதனால் விஎன்எஸ் மதகில் தண்ணீர் வெளியெற்றுவதில் மற்றும் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்கிற அச்சம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மதகின் தூண்களில் ஏற்பட்டுள்ள விரிசலை ஆரம்பத்திலேயே பழுதுபார்க்கவேண்டும் எனவும் இல்லையெனில் இதனால் சேதம் அதிகமாகி ஏரியில் தண்ணீர்தேக்கமுடியாத நிலை ஏற்படலாம் எனவும் விவசாயிகள் தங்கள் அச்சத்தை  தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/