நெய்வேலிக்கு அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி வருகையொட்டி கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பந்தல்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 February 2024

நெய்வேலிக்கு அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி வருகையொட்டி கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பந்தல்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


அதிமுக கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நெய்வேலி நகரத்தில் உள்ள செவ்வாய் சந்தை ரவுண்டானாவில், வருகின்ற 22 ஆம் தேதி,  புதிதாக நிறுவப்பட்டுள்ள புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதாவின் முழு திருஉருவ வெண்கல சிலையை, திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறுபுரையாற்ற அதிமுக கழக பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமி வருகை தர உள்ளார். 

இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிமுக கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர்.ராஜேந்திரன் தலைமையில் பந்தல்கால் நடும் முகூர்த்தம்  நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, முகூர்த்த காலில், மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் குங்குமம், தடவி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மேடை அமைப்பதற்கான பந்தல்கால்  நட்டனர். 


இந்நிகழ்வில் நெய்வேலி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நெநெய்வேலிக்கு அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி வருகையொட்டி கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பந்தல்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 


அதிமுக கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நெய்வேலி நகரத்தில் உள்ள செவ்வாய் சந்தை ரவுண்டானாவில், வருகின்ற 22 ஆம் தேதி,  புதிதாக நிறுவப்பட்டுள்ள புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதாவின் முழு திருஉருவ வெண்கல சிலையை, திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறுபுரையாற்ற அதிமுக கழக பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமி வருகை தர உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிமுக கழக அமைப்பு செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர்.ராஜேந்திரன் தலைமையில் பந்தல்கால் நடும் முகூர்த்தம்  நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, முகூர்த்த காலில், மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் குங்குமம், தடவி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மேடை அமைப்பதற்கான பந்தல்கால்  நட்டனர். 


இந்நிகழ்வில் நெய்வேலி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.

No comments:

Post a Comment

*/