சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூ ர் நெடுஞ்சாலையில் நெல் அறுவடை இயந்திரம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2024

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூ ர் நெடுஞ்சாலையில் நெல் அறுவடை இயந்திரம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் வழியாக சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் வெளி மாநிலத்திற்குச் செல்லும் நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் செல்லும் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனம் ஆபத்தான வளைவில் திரும்பும்போது எதிர்பாராமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த  விபத்தில் நெல் அறுவடை இயந்திரம் மற்றும் அதனை ஏற்றி வந்த வாகனம் முற்றிலும் சேதமானது. வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.‌ முக்கியமாக இப்பகுதியில் சாலை பராமரிப்பு பணி சில தினங்களுக்கு முன்புதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

*/