ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் மாசி மகத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் மாசி மகத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலையாத்தூர் கிராமத்தில் மணிமுத்தாறு வெள்ளாறு ஆகாயகங்கை ஆறு இந்த மூன்று ஆறுகளும் ஒன்று சேரும் இடமானது தான்  கூடலையாத்தூர் என்று அழைக்கப்படுகிறது வருஷம் வருஷம் மாசி மகத்தன்று முன்னோர்களுக்கு இந்த நதி கரையில் தர்ப்பணம் கொடுத்தால் நேரடியாக மோச்சத்துக்கு செல்வதாகவும் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் ராஜராஜ சோழனின் மகனுக்கு மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய் வந்ததாகவும் இதனால் கூடலையாத்தூர் கிராமத்தில் 48 நாள் தங்கி இருந்து தினந்தோறும் இந்த நதியில் குளித்துவிட்டு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்ததால் அந்த நோய் குணமடைந்ததாகவும் ஒரு தனி வரலாறு உண்டு இதனால் பல ஊர்களிலும் இருந்தும் பொதுமக்கள் ஆண்டு தோறும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளனர்.

No comments:

Post a Comment

*/