இவர்களுக்கு முதலில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டுஆய்வை சரியான முறையில் எடுக்காததால் தங்களுக்கு குறைவான இழப்பீடே கிடைத்துள்ளதாக நிலம், மனை இவைகளைக் கொடுத்தவர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் அவர்கள் கூடுதல் மற்றும் சரியான இழப்பீடு கேட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலம், அரசு அலுவலகம் என நடந்து வருகிறார்கள்.இதில் பலர் தங்களுக்கு தவறான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக்கூறி அதிகாரிகளை எதிர்த்து நீதிமன்றத்தையும் நாடியிருகிறார்கள். சாலைப் பணியையும் விரைந்து முடிக்காமல்சாலை விரிவாக்கப்பணிக்கு இடம் வழங்கியவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்காமல் இருப்பதால் அதனால் தேவையற்ற கால விரயம் ஏற்பட்டு சாலை விரிவாக்கப்பணியில் அதிக செலவினமும் ஏற்படுவதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குமாரக்குடி பகுதியில் இருந்து கருணாகரநல்லூர் பகுதி வரை நிலம் மனை கொடுத்த பலருக்கும் சரியான இழப்பீடு வழங்கவில்லை. தயாரிக்கப்பட்டதிட்ட அறிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அவர்கள் இது குறித்துநடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதிலையே கூறிச்சென்றுள்ளனர். இந்தப் பிரச்சனைக்கு எது நிரந்தரதீர்வோ அதை தாமதிக்காமல் அதிகாரிகள் செய்து தந்து சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே இப்பணிக்கு நிலம், மனை இவைகளை கொடுத்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment