கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆபத்தானபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற தை மாதம் 28 ஆம் தேதி (11.02.24) ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற உள்ளது இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 10.02 .24 அன்று மாலை சுமார் 6 மணி அளவில் முதல் கால பூஜைகள் ஆரம்பிக்க உள்ளது தொடர்ந்து காப்பு கட்டுதல் மகா கணபதி ஹோமம் ,நவகிரக ஹோமம் ,மகாலட்சுமி, ஹோமம், மிருத்சங் கிரகணம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், ஷன்னவதி ஹோமம், பூர்ணாஹீதி தீபாராதனை அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
தொடர்ந்து 11.2.2024 இரண்டாம் கால பூஜைகளான கோமாதா பூஜை, நாடி சந்தானம், தத் வார்ச்சனை, சபர்சாஹீ, விசேஷ திரவிய 108 மூலிகைகள் ஹோமம், பூர்ணாஹீதி தீபாரதனை, கடம் புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.
No comments:
Post a Comment