விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 February 2024

விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்.


விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி முதல்  தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி சுமார் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்கனவே உள்ள பழைய சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது 


மேலும் ஒரு சில இடங்களில் சாலை விரிவாக்க பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதனால் சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதும் இதனால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் சாலை பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.


இதனை தொடர்ந்து இன்று மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலும் அவர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசே பொது மக்களை உயிர் பலி வாங்கும் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை முழுவதுமாக உடனடியாக முடித்திடு என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் வடலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.

No comments:

Post a Comment

*/