வடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி உபகரணங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2024

வடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி உபகரணங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் யோகா பயிற்சி உபகரணங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


ரோட்டரி சங்க உதவி ஆளுநர் புருஷோத்தமன்  தலைமையில் நடைபெற்ற விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி உபகரணங்கள் வழங்கி தொடங்கி வைத்தனர், மேலும் நிகழ்வில் சிறப்புரையாளராக கலந்து கொண்ட ஆசிரியர் வி.வினோதினி அவர்கள் பள்ளி மாணவர்கள் மத்தியில் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உடல் ஆரோக்கியம் மாணவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என விரிவாக எடுத்துரைத்தார்  மேலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேனா உள்ளிட்ட எழுது உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, நிகழ்வில் கருங்குழி பள்ளியில் தலைமை ஆசிரியர் கனகசபை, வடலூர் ரோட்டரி சங்கத் தலைவர் மகாராஜன், செயலாளர் சேகர், பொருளாளர் உன்னிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் ராஜன் பாபு, முன்னால் செயலாளர் முருகன், உள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- தே.தனுஷ் செய்தியாளர் குறிஞ்சிப்பாடி.

No comments:

Post a Comment

*/