குறிஞ்சிப்பாடியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2024

குறிஞ்சிப்பாடியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் தமிழக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறையின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  விற்பனை கூடம் மற்றும் வணிக வளாக கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் வேளாண் பொறியியல் துறை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசுகையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் வணிக வளாகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது போல குறிஞ்சிப்பாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வேளாண் துறைக்கு அறிவித்த அனைத்து திட்டங்களும் குறிஞ்சிப்பாடி பகுதிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இறுதியில் வேளாண் துறையின் கீழ் விவசாய உபகரணங்களுக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை வழங்கினார்.


நிகழ்வில் வேளாண் உற்பத்தி வேளாண்மை துறை ஆணையர்கள், வேளாண் இயக்குனர்கள் வேளாண்மை மற்றும் விற்பனை வணிகத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என 500க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/