கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் கிராமத்தில் அடைக்கலமேரி (75) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருகிறோம். அதற்காக அதிகாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என கூறி அவரிடமிருந்து நகையை கழட்டித் தர கூறியதின் பேரில் அடைக்கலமேரி அவர்கள் சொன்னதை உண்மை என்று நம்பி தன் காதில் இருந்த கம்மலைக் கழட்டி கொடுத்துள்ளார். அதனை மர்ம நபர்கள் வாங்கிச் சென்றனர்.
பின்னர் அடைக்கலமேரிக்கு முதியோர் உதவித்தொகை ஏதும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அடைக்கலமேரி ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைக்குமார் (52), சரவணன் (35), ஆகியோர் என்பதும் அடைக்கலமேரியை ஏமாற்றியவர்கள் என்பது தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மர்மநபர்கள் தொடர்ந்து பல மாதங்களாக முதியோர்களை குறி வைத்து இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என்றும், சிறைக்கு சென்று விட்டு திரும்பி வருபவர்கள் மீண்டும் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டிவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment