இதனால் இப்பகுதியை சுற்றி நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. உடனடியாக தடுப்பணைக் கட்ட கோரிக்கை வைத்து புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவனின் தலைமையில் புவனகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், வணிகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று தமிழகஅரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் அமைப்புச் செயலாளர் முருகுமாறன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், கானூர் பாலசுந்தரம் ,முன்னாள் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசு, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், காட்டுமன்னார்குடி முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரமூர்த்திமற்றும் புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர், கிழக்கு ஒன்றிய செயலாளர் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர், மேற்கு ஒன்றிய செயலாளர் புவனகிரி நகரச் செயலாளர், சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அருண்மொழித்தேவன் எம்எல்ஏ பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மக்களின் நலன் காக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட தடுப்பணைக் குறித்து பலமுறை அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. மேலும் இந்தத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து நிலம் கையகப்படுத்தி, இப்படி எல்லாமே தயார் நிலையில் இருந்தும் தமிழகஅரசு தடுப்பணையை கட்டாமல் தாமதித்து வருகிறது.
தடுப்பணை கட்ட 100 கோடி நிதி இல்லை என்று கூறும் தமிழக அரசு பிரயோஜனம் இல்லாத பேனா சிலைக்கு ஆர்வம் காட்டுகிறது. கழக ஆட்சியின் போது எடப்பாடியார் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள கடந்த அதிமுக ஆட்சியை குறை கூறி வருகிறார். இதுவரை இவர்கள் ஆட்சியில் விவசாயிகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவிஅனிதா பிரச்சனையில் காட்டிய ஆர்வத்தை இவர்கள்ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது வரை சுமார்20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதைப் பற்றி எல்லாம் திமுக பேச மறுக்கிறது. ஆனால் இந்த துயரங்களையும் வேதனையையும் முன்கூட்டியே அறிந்து 7.5 சதம் இட ஒதுக்கீடு தந்து மருத்துவ கனவோடு இருந்த மாணவர்கள் வாழ்வில் நம்பிக்கை தந்தவர் எடப்பாடியார் என்றும் சேத்தியாத்தோப்பில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்டது. புவனகிரியின் வெள்ளாற்று பாலம் அதிமுக அரசால் கட்டப்பட்டது இப்படி அதிமுகவால் செய்யப்பட்ட பல திட்டங்கள் குறித்துப் பேசினார்.
தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பை அழித்து வருகின்றனர்.ஆனால் விவசாயத்திற்கு தனிபட்ஜெட் போடுவதாகக் கூறுகிறார்கள்.இதனால் என்ன பயன்? எப்போதும் மக்களுக்கு அதிமுக மட்டுமே பாதுகாப்பு தரமுடியும்.அதை மனதில் வைத்து கொள்ளுங்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்பது இப்போது முக்கியம் இல்லை. வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பிரச்சினைக்கு யார் தீர்வு தருகின்றனர் என்றும், அதற்காக யார் பாடுபடுகிறார்கள் என்றும் பார்க்கும் போது அதிமுக மட்டுமே உங்களது கண்முன் இருப்பது தெரியும்.
நெய்வேலி என்எல்சி விவகாரத்தில் இதுவரை எந்த குரலும் கொடுக்காத பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பாராளுமன்ற தேர்தல் வருகிறது என்பதால் குரல் கொடுக்கிறார். 2.5 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் பேரியக்கமாக எடப்பாடியார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.இதுதான் உண்மையான அதிமுக என்பது தற்போது உலகமே அறியும்.
இப்படி சிறப்பான மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்திய எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் என்பது மக்கள் கொடுக்கும் ஆதரவை வைத்தே தெரிகிறது. தமிழகஅரசு வெள்ளாற்றில் தடுப்பணை உடனடியாக கட்டிவிவசாயிகள் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று கூறி பேச்சை நிறைவு செய்தார்.மேலும் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
No comments:
Post a Comment