கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முன்னதாக வெள்ளிக்கிழமை 09.02.2024 காலை 9 மணி முதல் 12 மணி வரை அணுக்கை மகா கணபதி ஹோமம், தேவதா அணுக்கை, நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது, இரண்டாம் நாளான சனிக்கிழமை 10.02.2024 கோ பூஜை, தீர்த்த சங்கிரஹனம், அக்னி சங்கிரஹனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகளும் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுமங்கலிகள் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் முளைப்பாரி வழிபாடு , கலார்க்ஷனம் யாகசாலை பிரவேசம், முதலாம் கால யாகசாலை விசேஷ ஹோமம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 11.2.2024 அன்று இரண்டாம் கால யாகசாலை, யாக மண்டப பூஜை ,யாக குண்ட பூஜை, ஸ்ரீ ஸூக்த ஹோமம் நாடி சந்தானம் நிகழ்வை தொடர்ந்து கோபுர கலச மஹா கும்பாபிஷேகம் மற்றும் அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது, தொடர்ந்து 12. 2. 2024 திங்கட்கிழமை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக வழிபாடு தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.
No comments:
Post a Comment