புவனகிரி அருகே ரோடு ரோலர் ஏறி இறங்கிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 February 2024

புவனகிரி அருகே ரோடு ரோலர் ஏறி இறங்கிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(32). இவர் வெல்டிங் வேலை செய்யும் வெல்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தன்னுடைய ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கொத்தவாச்சேரி முதல் நத்தமேடு கிராமம் வரைபுதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. 

ஒதுங்கி செல்ல வழி இல்லாததால்  ரோடு ரோலரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் சிவராஜ் நின்றிருந்தார். இந்நிலையில் ரோடு ரோலர் ஓட்டுநர் பின்பக்கம் நிற்கும் சிவராஜை கவனிக்காமல் அவரது இருசக்கர வாகனத்தில் ரோடு ரோலர் மோதி கீழே விழுந்தார். பின்பு விழுந்த சிவராஜ் மீது ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் தலை மற்றும் உடல், நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சிவராஜ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் நத்தமேடுகிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

No comments:

Post a Comment

*/