கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கேடிஆர் என்கிற விஜயராஜன் என்கிற தொழிலதிபர் சென்றஆண்டு இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கேப்பிடி திருமண மஹால் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர்கள் பட்டு கணேசன், கேபிடி இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபரின் அலங்கரிக்கப்பட்ட திரு வுருவப்படத்திற்கு அவரின் ஏனைய குடும்ப உறவினர்களான சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் 1-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன், சதீஷ், வசந்தராஜன், மணிராஜன், மகேஷ் உள்ளிடவர்களும் மற்றும் கிளாங்காடு, சென்னிநத்தம், சேத்தியாத்தோப்பு, அள்ளூர் ஆகிய கிராம பொதுமக்களும், சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த வியாபாரிகளும் திரண்டு வந்து திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்கள், ஏழைஎளியோர் என சுமார் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அவர் சார்ந்த குடும்பத்தினரால் அன்னதானமும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment