கடலூர் மாவட்டம் நெய்வேலி சேப்ளா நத்தம் பேருந்து நிலையம் அருகே லேபிள் பவுண்டேஷன் இலவச கல்வி சேவை அறக்கட்டளையின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது, லேபிள் பவுண்டேஷன் நிறுவனர் விஜய பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக விருதாச்சலம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அவர்கள் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தவர்.
பின்னர் நிகழ்ச்சி அவர் பேசுகையில் மாணவர்களுக்கு கல்வி மிகவும் அவசியமாக ஒன்று எனவும் செல்வத்தை சேர்த்து வைத்தால் அது குறுகிய காலத்தில் குறைந்து விடும் ஆனால் கற்கும் கல்வியோ நம்மை உயரிய நிலைக்கு கொண்டு செல்லும் என்றார், நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி


No comments:
Post a Comment