பொதுமக்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று கொசுவலை வழங்கிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2024

பொதுமக்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று கொசுவலை வழங்கிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுகள்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கங்கைகொண்டன் பேரூராட்சியின் 9வது வார்டு கவுன்சிலர்  லீமா ரோசி தனது வார்டில் கொசு தொல்லைகள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததின் அடிப்படையில் கொசுக்களால் பரவக்கூடிய சிக்கன் குனியா, டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதை தடுக்கும் வகையில் தனது வார்டுகளில் வீடு வீடாக சென்று 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள  கொசுவலைகளை வழங்கினார்.

நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் திருமாவளவன், விசிக ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய பொருளாளர் வீர சண்முகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  பேரூர் செயலாளர் பிரபாகரன், லாரன்ஸ் பிரபு, விமல்ராஜ், தினேஷ்குமார், தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 

No comments:

Post a Comment

*/