வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் மாசி மாத ஜோதி தரிசனம்காணக்குவிந்த பல்லாயிரம் பக்தர்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2024

வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் மாசி மாத ஜோதி தரிசனம்காணக்குவிந்த பல்லாயிரம் பக்தர்கள்.


கடலூர் மாவட்டம் வடலூரில் இராமலிங்க வள்ளலார் அமைத்தசத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்றுஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதே போல மாசி மாத பூச நட்சத்திரஜோதி தரிசனத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனத்தைக் காண அங்கே கூடியிருந்தனர். 

இதனையடுத்து மாத பூசத்தின்  ஜோதி காண்பிக்கப் பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் முக்கியமான சுலோகத்தை வாய்விட்டு உச்சரித்தபடி ஜோதி தரிசனம் செய்தனர். பின்னர் வள்ளலாரால்160 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அணையா அடுப்பின் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும்அன்னதானம்  வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/