சேத்தியாத்தோப்பு நகர கழகம் சார்பில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

சேத்தியாத்தோப்பு நகர கழகம் சார்பில்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழா சேத்தியாத்தோப்பு நகர அதிமுக செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாககடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமாகிய அருண்மொழி தேவன் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கோலப்போட்டி நடத்தப்பட்டதில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு  பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுகநகரச் செயலாளர் எஸ்.கே. நன்மாறன், நகர துணைசெயலாளர் சம்பத், நகரப் பொருளாளர் ராமலிங்கம், சேத்தியாத்தோப்பு வார்டு செயலாளர்கள் குணசேகரன், அஞ்சாபுலி, மதியழகன், ஸ்ரீதர், சர்புதீன்,சங்கர், லலிதா, தங்கமணி, சுரேஷ், ஜபருல்லா, ஹக்கீம், குருதேவ்சிங் மற்றும் சில நிர்வாகிகளும் அதிமுக கட்சியின் தொண்டர்களும் பெருந்திரலாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

*/