என்.எல்.சி. இந்தியா மற்றும் தேசிய மின்சக்தி பயிற்சி மையம் - இணைந்து நடத்தும் முதுநிலை பட்டய பயிற்சி வகுப்பின் தொடக்க விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 February 2024

என்.எல்.சி. இந்தியா மற்றும் தேசிய மின்சக்தி பயிற்சி மையம் - இணைந்து நடத்தும் முதுநிலை பட்டய பயிற்சி வகுப்பின் தொடக்க விழா நடைபெற்றது.


மத்திய அரசு நிறுவனமான தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் ( NPTI ) நெய்வேலி நிலக்கரி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அதன் சமூகப் பொறுப்புணர்வு நிதி உதவியுடன் ஓராண்டுக்கான இளநிலை பொறியியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டய பொறியாளர்களுக்கு மின் உற்பத்தி குறித்த ஓராண்டு கால பயிற்சியினை வழங்கி வருகிறது இதன் தொடக்கவிழா நெய்வேலியில் உள்ள தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

பயிற்சி மைய பொது மேலாளர் டாக்டர் தீப்தா தாகூர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக என்.எல்.சி நிறுவனத்தின் அதிபர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை குற்று விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வருகின்றது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் சமூகப் பொறுப்புணர்வு நிதியினை வழங்கி வருகின்றது. 


இதன் தொடர்ச்சியாக தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு கால சிறப்புப் பயிற்சியினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம். இதன் மூலம் கடலூர் மாவட்ட இளைஞர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக்கொள்ளவதோடு அவர்களின் வேலை வாய்ப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது எனக் தெரிவித்தார், நிகழ்ச்சியில் என்எல்சி நிறுவன அதிகாரிகள் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.                                 நெய்வேலி செய்தியாளர் வீ. வினோதினி 

No comments:

Post a Comment

*/