மேலும் நிரந்தர தொழிலாளர்களுக்கு காவேரி மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்கப்படாமல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் அவசர சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் என்எல்சி இந்தியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படாமல் என்.எல்.சி மருத்துவமனைக்குள் செயல்பட்டு வரும் காவேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ள பட்டு வருவதை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் காவேரி மருத்துவமனை என்எல்சி விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என எல்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்.சி தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்கு எதிரே ஒன்று கூடிய தொழிலாளர்கள் பண ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டுள்ள காவேரி மருத்துவமனை உடனடியாக என்எல்சி மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டும், பணி புரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு என்.எல்.சி மருத்துவ மனையால் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் பாரபட்சம் இன்றி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
கடந்த 2019 முதல் 2023 வரை 5 ஆண்டுகளில் மேல் சிகிச்சைக்காக என்எல்சி நிர்வாகத்தால் பிற தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் செலுத்திய மொத்த தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் இன்று வரை மருத்துவ புத்தகம் வழங்கப்படாமல் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக மருத்துவ புத்தகத்தை வழங்க வேண்டும் தொழிலாளர்கள் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சையை தனியாரிடம் ஒப்படைக்காமல் என்எல்சி தலைமை மருத்துவமனையில் உயர்ரக உபகரணங்களை பெற்று மருத்துவமனையிலேயே செய்திடக் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கவலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தவறினால் அடுத்த கட்ட போராட்டத்தில் விரைவில் ஈடுபட போவதாக தெரிவித்தனர், ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment