கடந்த 19 12.2023 அன்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் நான் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது கோயில் நிர்வாகத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத வைத்தியநாதன் மகன்கள் கார்த்திகேயன் ,சிவராஜ் ,ராஜகோபால் மற்றும் அடையாளம் தெரியாத ஐந்து பேருடன் நான் டியூஷன் எடுக்கும் இடத்திற்கு அத்துமீறி நுழைந்து கார்த்திகேயன் சிவராஜ் ராஜகோபால் ஆகியவர்கள் என்னை ஆபாசமாக திட்டியும் உன் புருஷன் மீது பொய் வழக்கு போட்டு ஓட வச்சிருக்கோம் என்றும் தகாத வார்த்தையில் கூறியும் என்னை வெளியே போகவில்லை என்றால் உன்னை அசிங்கப்படுத்தி சாகடித்து விடுவோம் என்று கூறியதாகவும் தலை முடியை இழுத்து தள்ளி கதவை சாத்தி பூட்டினார்கள்.
மேலும் என்ன அசிங்கமாக திட்டி கழுத்தை நெறித்து கொல்லப் பார்த்தார்கள் நான் சத்தம் போட்டதும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இந்தவர்கள் அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றினார்கள் இது சம்பந்தமாக மேற்கண்ட நபர்கள் மீது நான் 9-12-23 அன்று கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன் ஆனால் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இது சம்பந்தமாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி அன்று புகார் கொடுத்து இருந்தேன் ஆனால் இது நாள் வரையில் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மேற்கண்ட நபர்களான சிவராஜ் ராஜகோபால் கார்த்திகேயன் மற்றும் அவர்களுடன் வந்த அடையாளம் தெரியாத இந்த நபர்கள் என்னை தினமும் வந்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் எடுத்து செல்கின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment