சுமார் 17 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டது இந்த வீராணம் ஏரி. ஏரியின் மொத்த நீர் தேக்கும் அளவு 47.50 அடி . ஏரிக்கு நீர்வரத்து கீழ அணையில் இருந்து வடவாறு வழியாகவும் பல்வேறு ஓடைகள் வழியாகவும் இருந்து வருகிறது. மழை வெள்ளக் காலங்களில் உபரி நீராகவே பல லட்சம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சியின் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீராக இங்கிருந்து தண்ணீர் செல்கிறது.இப்படி பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ஏரியில் இப்போது மலை போல மண் மேடுகள் குவிந்துள்ளன. அது மட்டுமல்லாமல் ஏரியின் திருச்சின்னபுரம் பகுதியில் இருந்து லால்பேட்டை வரை சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஏரியே அடையாளம் தெரியாத அளவில் நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளும், முட்புதர்களும் சூழ்ந்துள்ளன. இதுபோலவே ஏரியின் மேற்கு பகுதி கரை ஓரங்களிலும் பல்வேறு மரக்காடுகள் வளர்ந்துள்ளன.
இந்த ஏரியை நம்பி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மட்டுமல்லாது 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நேரடியாகவும், மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கருக்கு பாசனத்திற்கு உதவி வருகிறது. இவ்வாறு சிறப்பு மிக்க இந்த ஏரியை காக்க வேண்டியது அவசியம் என்று இப்பகுதி கிராம மக்கள் விவசாயிகளும் அச்சத்தோடு தெரிவிக்கின்றனர். ஏரியைக் காக்க உடனடியாக எந்தவித காலதாமதமும் செய்யாமல் முழுமையாக தூர்வாரி பாசிகள், காட்டாமணக்குச் செடிகள், முட்புதர்கள் இவைகளை அகற்றித் தர வேண்டும்.
மேலும் வெள்ள காலங்களில் வெளியேற்றப்படும் பல லட்சம் கன அடி உபரி நீரை ஏரிக்குள்ளேயே தேக்குவதற்கு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment