மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெ. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் எம் .சி.சம்பத் உத்தரவின் படி கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மேலும் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி கே என் தங்கமணி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவல் ஜி ஜெ குமார் மாநில அம்மா பேரவை ஆர் வி ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் கே. காசிநாதன் ஒன்றிய குழு தலைவர் பக்கிரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை ஆனந்த் ஒன்றிய கவுன்சிலர் கிரிஜா செந்தில்குமார் இவர்களுடன் முன்னாள் கவுன்சிலர் முதுநகர் பகுதி செயலாளர் வ. கந்தன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment