ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து அங்கு சர்வதேச மையம் அமைக்கலாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து அங்கு சர்வதேச மையம் அமைக்கலாம்.


வடலூர் பார்வதிபுரம் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர்கள். அதில் தற்பொழுது அறுபது ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இதில்46 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை. எந்த ஒரு கோயிலாக இருந்தாலும் அக்கோயிலில் இருந்து 100 அடி தூரம் தள்ளிதான் கட்டடம் கட்ட வேண்டும் என்ற வரையறை உள்ளது. 

ஆனால் வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் ஞான சபையின் அருகே 20 அடி அருகாமையில் அரசு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது. வள்ளலார் தெய்வ நிலையத்தை பார்த்திராத, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோட்டையில் இருந்தவாறு அடிக்கல் நாட்டுவது அறமா? நேர்மையா?.


தமிழக அரசு முதலில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து அங்கு சர்வதேச மையம் அமைக்கலாம்.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 

No comments:

Post a Comment

*/