கல்வி கட்டணம் செலுத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடிய அதிமுக ஒன்றிய செயலாளர் காசிநாதன். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

கல்வி கட்டணம் செலுத்தி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடிய அதிமுக ஒன்றிய செயலாளர் காசிநாதன்.


தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் சரவணன் - சசிகலா இவர்களின் மகள் பிரியதர்ஷினி தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அதிமுக தொண்டர் சரவணன் ஏழ்மை நிலையை அறிந்த ஒன்றிய கழக செயலாளர் காசிநாதன் பிரியதர்ஷினியின் கல்விக் கட்டணம் செலுத்த ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினார். 

No comments:

Post a Comment

*/