இந்த நகர் சப்தகிரி குரூப் போடப்பட்ட நகர். திருவந்திபுரம் ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் தெரு விளக்கு போடுவதற்கான விண்ணப்பம் மின்சார துறைக்கு இதுவரை அனுப்பப்படாததால் தெருவிளக்கு போடப்படவில்லை. மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருந்தும் வீடுகளுக்கு இதுவரை சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை. மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது முதல் இதுவரை சுத்தம் செய்யப்படாததால் செம்மண் கலராக குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. பலமுறை இந்த நகரில் குடியிருக்கும் பொதுமக்கள் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்துணைத் தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆகியோரிடம் முறையிட்டும் இதுநாள் வரை தெரு விளக்குகள் போடப்படவில்லை.
மேலும் இந்த நகரில் வசிக்கும் பொதுமக்கள் குடியரசு தினத்தன்று நடைபெற்ற திருவந்திபுரம் கிராம சபை கூட்டத்தில் தெருவிளக்கு கோரி மனு அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேல்நிலை நீர் தேக்கு தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை சாலை வசதி செய்து தரப்படவில்லை. குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு டேங்க் ஆபரேட்டர் பதவி போடப்படவில்லை என யுனிவர்சல் டவுன்ஷிப் நகரில் வாழும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் அல்லது கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக சம்பந்தப்பட்ட நகருக்கு ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment