நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த தொழிலாளி பலி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 February 2024

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த தொழிலாளி பலி.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலையத்தில் பணி மேற்கொண்டிருந்தபொழுது ஒப்பந்த தொழிலாளி ஒருவர் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மந்தாரகுப்பம் அடுத்த கத்தாழை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவர் நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார், இன்று வழக்கம் போல் காலை பணிக்குச் சென்ற அவர் பாய்லர் செக்ஷனில்  எலக்ட்ரிக்கல் கேபிள் இழுக்கும் பணி மேற்கொண்டு வந்துள்ளார் அப்பொழுது எலக்ட்ரிக்கல் கேபிள் ஒயரை இழுக்க முற்பட்டபோது  நிலை தடுமாறி சுமார் 42 அடி உயரத்திலிருந்து. கீழே விழுந்துள்ளார் இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு என்எல்சி தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


என்எல்சி நிறுவனத்தில் தொடர்ந்து பணியின் பொழுது ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது எனவே என்எல்சி நிர்வாகம் பணி மேற்கொள்ளும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என சக தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


- நெய்வேலி செய்தியாளர் - வினோதினி.வீ 

No comments:

Post a Comment

*/