கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவனின் அறிவுறுத்தலின் பேரில் நகர கழக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகுமணி, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர் புரட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment