தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிராம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2024

தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிராம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் எதிரே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலயத்தில் தை அம்மாவாசை  முன்னிட்டு  ஸ்ரீ பிராம்மமுகி தில்லை காளியம்மன்  ஊஞ்சல் உற்சவம்  நடைபெற்றது.


முன்னதாக பிரம்மமுகி தில்லை காளியம்மனுக்கு மிளகாய் வற்றலால் நிகம்பலா யாகம் மேற்கொள்ளப்பட்டு கோயிலை சுற்றி கலச புறப்பாடு நடைபெற்றது, பின்னர் கலசத்தில் உள்ள நீரினால் சிறப்பான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து பம்பை இசை முழங்க, அம்மன், காட்டேரி, விநாயகர் ,குறத்தி ஆகிய வேடமிட்டு ஆடல் பாடலுடன் காளி நடனம் நடைபெற்றது.

பின்னர் இரவு  12 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள 72 அடி உயர தில்லை காளி சிலைக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது, நிகழ்வில் பல்வேறு பகுதியை சேர்ந்த  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.

No comments:

Post a Comment

*/