நெய்வேலியில் வழக்கறிஞரை தாக்கிய, உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2024

நெய்வேலியில் வழக்கறிஞரை தாக்கிய, உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.


கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் பகுதிக்குட்பட்ட  வடக்கு சேப்பளாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், இவர் நெய்வேலி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் அஸ்வதி என்பவரை கடந்த 08/02/24 அன்று,  பெற்றோர்களின், எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் அஸ்வதியின் பெற்றோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில், தனது மகள் காணவில்லை என்றும், வழக்கறிஞர் சதீஷ்குமார் மீது சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் மந்தாரக்குப்பம் காவல்  நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட சதீஷ்குமார் மற்றும் அஸ்வதி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு சரண்டர் அடைந்ததாக கூறப்படுகிறது. 

காவல் நிலையத்திற்கு வந்தடைந்த காதல் ஜோடியான வழக்கறிஞர் சதீஷ்குமார், அஸ்வதியுடன், அவரது நண்பர்களான வழக்கறிஞர் தமிழரசன் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் மணிமேகலை மேற்கொண்ட விசாரணையில்,  பெண்ணின் பெற்றோருக்கு சாதகமாக  செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணின் பெற்றோர்கள்  ஜாதி பெயரை கூறி,  தமிழரசன் என்ற வழக்கறிஞரை,  திட்டியதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து சம்பந்தப்பட்ட  வழக்கறிஞர்கள்  சதீஷ்குமார்,  தமிழரசன்,  செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர்,  உதவி ஆய்வாளர் மணிமேகலையிடம் கேட்ட பொழுது,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்  உதவி ஆய்வாளர் மணிமேகலை,  போலீசை எதிர்த்து பேசுறியா?  என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தமிழரசனை தாக்கியதாக கூறப்படுகிறது.  அதேபோல் அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த மற்றொரு காவலரும் தமிழரசனை தாக்கியதாக கூறப்படுகிறது.


ஜாதிப் பெயரை கூறி ஆபாசமாக பேசிய பெண்ணின் பெற்றோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் வழக்கறிஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மணிமேகலை,  சக காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல் நிலையம் முன்பு விருதாச்சலம் - கடலூர் சாலையில் அமர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் அவரது உறவினர்கள்  மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த நெய்வேலி சரக காவல்துறை கண்காணிப்பாளர் சபியுல்லா மற்றும் வடலூர் காவல் ஆய்வாளர் ராஜா சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன், பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில்  மறியல் கைவிடப்பட்டது.


மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை, காதலித்து திருமணம் செய்த வழக்கறிஞருக்கு,  உதவியாக வந்த  சக வழக்கறிஞர்களை காவல் அதிகாரி தாக்கியதாக கூறி சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர்.

No comments:

Post a Comment

*/