கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், ஸ்ரீ ராம் தேவி மருத்துவமனை, கடலூர் மாவட்டம் பார்வை இழப்புத்தடுப்புச் சங்கம், மற்றும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 10/02/24 சனிக்கிழமையன்று சேத்தியாத்தோப்பு மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள ஸ்ரீராம் தேவி மருத்துவமனையில் காலை 9:30 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.
இந்த பரிசோதனை முகாமில் கண்களில் ஏற்படும்குறைபாடுகளான கண்புரை நோய், கிட்டப்பார்வை,தூரப்பார்வை, கண் பிரச்சனை காரணமாக வரும்தலைவலி, சதை வளர்ச்சி, கண்ணில் நீர்வடிதல், கண்ணில் நீர் அழுத்தம் இப்படியான குறைபாடுகளைக் கண்டறிந்து அதை சரி செய்வதற்காகவே இந்தஇலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமிற்காக ஆட்டோ மூலம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மற்றும் அதனையொட்டியுள்ள கிராமங்கள்ஆகிய இடங்களில் ஒலிபெருக்கி விளம்பரம் மற்றும் நோட்டீஸ் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரங்களைக் கேட்டறிந்த கண்களில் குறைபாடுகள் உள்ள ஆண்கள், பெண்கள் என 186 நபர்கள் இந்த பரிசோதனை முகாமுக்கு வருகை தந்தனர். வருகை தந்த அனைவருக்கும் கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 52 நபர்களுக்கு கண்ணில் லென்ஸ் பொருத்த வேண்டிய சூழ்நிலை இருந்ததைக் கண்டறிந்தனர். பரிசோதித்த தினத்திலேயே கண்ணில் இலவச லென்ஸ் பொருத்த வேண்டி பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு இலவசமாகவே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்த மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமிற்கானஏற்பாடுகளை சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், ஸ்ரீராம் தேவி மருத்துவமனை மருத்துவர் பரணிதரன், நகர அரிமா சங்க செயலாளர் எஸ்.பிரவீன், கடலூர் மாவட்ட அரிமா சங்கத் தலைவர் டாக்டர்.R.மணிமாறன், நகர அரிமா சங்கப் பொருளாளர் ஏ.என்.ஜி. லோகநாதன், மற்றும் அரிமா சங்க உறுப்பினர்அண்ணாமலை ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment