திறந்த சில நாட்களிலேயே திடீரென மூடப்பட்ட மாற்று சாலை மீண்டும் வாகன ஓட்டிகள் அவதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 February 2024

திறந்த சில நாட்களிலேயே திடீரென மூடப்பட்ட மாற்று சாலை மீண்டும் வாகன ஓட்டிகள் அவதி.


கடலூர் மாவட்டம் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குத்து அருகே கன்னு தோப்பு பாலம் உள்ளது மிக குறுகிய பாலம் என்பதால் பல விபத்துகள் இப்பாலத்தில் நடைபெற்ற வந்த நிலையில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி அண்மையில் தொடங்கப்பட்டு பழைய குறுகிய பாலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததால் குறுகிய பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக கடலூர் மாவட்ட நிர்வாகம் என்எல்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து பழைய குறுகிய பாலம் அருகே மாற்று பாதை அமைக்கப்பட்டு கடந்த 24.01.24 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது இந்நிலையில் திடீரென மாற்றுப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


வாகன நெரிசலை குறைக்க மாற்று பாதையை ஏற்படுத்தியும் மீண்டும் பழைய நிலையே தொடர்வதால் வாகன ஓட்டிகள் கவல அடைந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/