வடலூரில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 February 2024

வடலூரில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கு இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெய்வேலி சரக துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா அவர்களின் வழிகாட்டுதல் படி சென்னை ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு இலவச முழு உடல் மற்றும் கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


இம்முகாமை வடலூர் காவல் ஆய்வாளர் ராஜராஜன் துவக்கி வைத்தார், மேலும் முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல் ,ரத்த அழுத்தம், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி 

No comments:

Post a Comment

*/