ஸ்ரீமுஷ்ணத்தில் 27 கிராமங்களிலிருந்து வந்து தரிசனம் தந்த 27 பெருமாள்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 February 2024

ஸ்ரீமுஷ்ணத்தில் 27 கிராமங்களிலிருந்து வந்து தரிசனம் தந்த 27 பெருமாள்கள்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் மூன்றாம் ஆண்டு பன்னிருகருட சேவை விழா வண்ணமயமான வானவேடிக்கையோடு  நடைபெற்றது. இது 27 ஊர்களிலிருந்து வருகை தரும் 27 பெருமாள்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் அரிய நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் போது புராண இதிகாசங்கள் கற்றுணர்ந்த 500 பாகவதர்கள் கலந்துகொண்டு பெருமாள் பாடல்களை பாடினர்.தொடர்ந்து மறுபக்கத்தில் பக்தி பரவசத்தோடு பெண்கள் கும்மியடித்து பெருமாளை வரவேற்று வழிபட்டனர். 27 பெருமாள் ஒரே இடத்தில் சந்திக்கும் பன்னிரு கருட சேவைக்கு விருத்தாசலம், பூவனூர், வண்ணாங்குடிகாடு, எரப்பாவூர், வலசக்காடு, வட்டத்தூர், காவனூர், ஜமீன் காட்டாத்தூர் உள்ளிட்ட 27 கிராமங்களிலிருந்து மக்கள் வருகை தந்தனர் .

பெருமாள்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக  பஜனை, கும்மியடி பாடல்களோடு ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருளாசிகளை வழங்கினர். இதனைக் காண பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்று பன்னிரு கருட சேவை பெருமாளை தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/