புவனகிரி அருகேஅரசுப் பள்ளி மாணவர்களின் மதிய உணவில் அரணை கிடந்து, அந்த உணவை உண்டதால் வாந்தி மயக்கம் பரபரப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2024

புவனகிரி அருகேஅரசுப் பள்ளி மாணவர்களின் மதிய உணவில் அரணை கிடந்து, அந்த உணவை உண்டதால் வாந்தி மயக்கம் பரபரப்பு.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாக்காங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 240 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சில மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்துமதிய உணவு கொண்டு வந்து உண்டு வருகின்றனர். பள்ளியில் சமைத்த மதிய உணவை சாப்பிட்ட மற்றைய மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட உணவில் ஒரு மாணவி தன் உணவில் கிடந்த அரணையை கையில் எடுத்துக் காண்பித்துள்ளார். 

இதனைத் தெரியாமல் மற்ற மாணவ மாணவிகளும் இந்த உணவை  சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் உணவை சாப்பிட்ட இரண்டு பேருக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த உள்ளூர் பெற்றோர்கள் ஓடி வர அவர்கள் மூலம் மற்றைய பெற்றோர்களுக்கும் செய்தி சொல்லப்பட்டு பயம் கலந்த பீதியில் அவர்களும் ஒன்றுதிரண்டு விட்டனர்.பள்ளி முன்பு திரண்டு வந்த பெற்றோர்கள் உணவை சாப்பிட்டஅனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினர். அப்போது பள்ளியில் இருந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்நேரத்தில் உணவை உண்ட இன்னொரு மாணவி மயங்கி விழவே  மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் தங்கள் பிள்ளைகளைப் பற்றிய பயம் தொற்றிக் கொள்ள, அனைவரும் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகை யிட ஆரம்பித்தனர்.  கால தாமதமாக வந்த மருத்துவத் துறையினர் இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களை மருத்துவ சிகிச்சைக்காக இந்தப் பள்ளியிலிருந்து சிதம்பரம்அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இப்பிரச்சனையால் இப்பகுதி இன்று பரபரப்பாக காணப்பட்டது. 

No comments:

Post a Comment

*/