வடலூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்காக மன நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2024

வடலூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்காக மன நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் மேம்படுத்தப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட மன நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக வடலூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்காக மன நல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது விழாவை வடலூர் நகர மன்ற தலைவர் சிவகுமார் மற்றும் வடலூர் ஆணையர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் கலந்துகொண்ட 70 பணியாளர்களுக்கு மாவட்ட மன நல தலைமை மருத்துவர்  சத்தியமூர்த்தி அவர்கள் மனநலம் குடிப்பழக்கம் இருந்து விடுபடுவது மனசோர்வு மனக்குழப்பம் போன்ற மனநிலை குறைபாடுகளுக்கு கடலூர் பொது மருத்துவமனையிலும் வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மனநல மருத்துவரிடம்  சிகிச்சை பெறலாம் என்பதை விளக்கிக் கூறினார் மனநல பிரச்சனைகளுக்கு 104  எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார் வடலூர்  வட்டார மருத்துவ அலுவலர் அகிலா  முன்னிலை வகித்து நன்றியுரை கூறினார்.


- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.

No comments:

Post a Comment

*/