மதிய உணவில் விஷ பூச்சி இருந்தது தெரியாமல் சாப்பிட்டு 75 மாணவர்களை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் கிரையன் ரவிக்குமார் மாணவர்களிடத்தில் நலம் விசாரித்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2024

மதிய உணவில் விஷ பூச்சி இருந்தது தெரியாமல் சாப்பிட்டு 75 மாணவர்களை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் கிரையன் ரவிக்குமார் மாணவர்களிடத்தில் நலம் விசாரித்தார்.


கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சாக்கங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 240 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 75 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் அரணை எனப்படுகின்ற விஷப்பூச்சி கிடந்துள்ளது. இதனை தெரியாமல் அவர்கள் உணவை சாப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில் உணவு சாப்பிட்ட 3 பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் அரசு பள்ளி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புவனகிரி அரசு தாலுகா மருத்துவமனையில் 22 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இதனை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் கிரையன் ரவிக்குமார் நேரில் வந்து பள்ளி மாணவர்களை உடல் நலம் விசாரித்தார். உணவில் என்ன விஷ பூச்சி இருந்தது என கேட்டறிந்தார். அதற்கு பள்ளி மாணவர்கள் அரணை இருந்ததாக தெரிவித்தனர். உங்களுக்கு ஏதேனும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன கேட்டறிந்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர் இடத்தில் தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் பெற்றோர் இடத்தில் மாணவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். 

No comments:

Post a Comment

*/