குறிஞ்சிப்பாடி இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகம் சார்பில் 31/1/2024 அன்று பராமரிப்பு பணிக்காக வடலூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானதாக கூறப்பட்ட நிலையில் அவை சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது பின்னர் மின் நிறுத்தம் அன்று செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 03/02/24 அன்று பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டது காலை 9 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் மின் நிறுத்தம் குறித்த அறிவிப்பு தேதியில் உள்ள குழப்பம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி இது போன்று ஒரு தேதியை அறிவிப்பதும் பின்னர் அதனை மாற்றுவதும் தொடர்கதையாகி வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி மின்வாரியம் அறிவித்த தேதியில் அடிக்கடி மாற்றம் செய்யாமல் அறிவிக்கப்பட்ட தேதியில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment