வடலூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 February 2024

வடலூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கியது.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் வினோத்குமார் இவர் தனது சொகுசு மாருதி சுசுகி காரில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார், கார் வடலூர் அடுத்த ஆண்டிக்குப்பம் அருகே வடலூர் - கடலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று கடக்க முற்பட்டதால் நிலை தடுமாறிய ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் கார் மோதாமல் இருக்க காரை திருப்பியதாக கூறப்படுகிறது, இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது, இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கார் மீட்கப்பட்டது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments:

Post a Comment

*/