கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார்.
மேலும் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், வடலூரின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது இங்கு தமிழகமல்லாது உலகமெங்கிலும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து வள்ளலாரின் ஜோதி தரிசன பெருவிழாவை ஆண்டுதோறும் தரிசித்து செல்கின்றனர், இங்கு சர்வதேச மையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அண்மையில் நடத்தியது
கடந்தாண்டு தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் ஜோதி தரிசனத்தை காண வள்ளலார் சத்திய ஞான சபையில் கூடினார்கள்
பெருவெளியில் உள்ள 70 ஏக்கர் இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி அங்கு வணிக வளாகம் சர்வதேச மையம் போன்ற கட்டிடங்களை கட்ட திட்டமிட்டுள்ளது மாதந்தோறும் ஜோதி தரிசன விழாவை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பெருவெளியில் நோக்கி வந்து செல்கின்றனர் எனவே வள்ளலார் வாழ்ந்த இடத்தில் கட்டிடங்களை கட்ட வேண்டாம் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன், அதனை பொறுப்பெடுத்தாமல் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி சர்வதேச மையத்தை அமைக்க அடிக்கல் நாட்டு விழாவை முதல்வரை மு க ஸ்டாலின் அவர்கள் நடத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் கடலூர் மாவட்ட அமைச்சருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் வள்ளலார் மண்ணில் தவறு செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டார்
சர்வதேச மையத்தை அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் உடந்தையாக இருக்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது அவை அனைத்தும் உண்மையாக இருக்கக் கூடாது அது வதந்தியாக இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன் எனவும்
மத்திய அரசு நிறுவனமான என்எல்சி நிறுவனம் சுரங்க மூன்று விரிவாக்க பணிக்காக நிலங்களை கையகப்படுத்தி வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பொது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்ன பேசினார்
செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி

No comments:
Post a Comment