சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைபராமரிப்பு பணிகளை சரிவர செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2024

சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைபராமரிப்பு பணிகளை சரிவர செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்லும்  பகுதியில் பின்னலூர் முதல் குமாரக்குடி வரை சுமார் 10 கிலோ தூரம் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை பராமரிப்புப் பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் சாலை ஓரங்களில் செம்மண் கொண்டு நிரப்பப்படாமல் இருந்து வந்தது. 

இதனால் சாலைக்கும் தரைப் பகுதிக்கும் இடையே அதிக பள்ளம் ஏற்பட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் சாலையோரங்களில் செம்மண் கொண்டு நிரப்ப வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை ஓரங்களில் செம்மண் கொண்டு நிரப்பி வருகின்றனர். அவ்வாறு நிரப்பப்படும் செம்மண்ணை இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் போட்டு மேடாக்கினால் தான் அது நாளடைவில் சமப்படும்போது சாலைக்கு சமமாக இடைவெளி இல்லாமல் இருக்கும்.


இதை சரி செய்யும் போதே கவனத்தில் கொண்டு சாலைப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கையாக வைத்து வருகின்றனர். இல்லையென்றால் மீண்டும் பழையபடியே சாலை மேடாகவும்சாலையின்ஓரப் பகுதி பள்ளமாகவும் ஆகி விடுவதற்கு வாய்ப்புண்டு என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/