கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வராஜ் அவர்கள் தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டியை வழங்கி தொடங்கி வைத்தார்.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு மொத்தம் சுமார் 150 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது இதில் மாணவிகள் 100 பேருக்கும் மாணவர்கள் 50பேருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மாணவ மாணவிகள் அனைவரும் மகிழ்வோடு மிதிவண்டிகளை பெற்றோருடன் வந்து பெற்றுச் சென்றனர். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.


No comments:
Post a Comment