அப்பணிகள் முடிவுற்றபின் கும்பாபிஷேக விழா நடத்திட நாள் குறிக்கப்பட்டது அதன் முன்பு யாக சாலையில் வைக்கப்பட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டது. இதன் பின்னர் புனித நீர்க்கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க சப்த கன்னியர் கோவில் கோபுரத்தின் மேல் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து மூலவர் ஸ்ரீ சப்த கன்னியர்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கோவில் கும்பாபிஷேக தரிசனம் கண்டு, ஸ்ரீ சப்த கன்னியர்களையும் வணங்கிச் சென்றனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment