கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் அருகே உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணிக்கு முதல் கால பூஜைகள் கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது தொடர்ந்து இரண்டாம் கால பூஜைகளான கோமாதா பூஜை விஷேச திரவிய 108 மூலிகைகள் ஓமம் பூர்ணாஹீதி தீபாரதனை காண்பிக்கப்பட்டு கலசங்கள் கோயில் வளாகத்தை சுற்றி கொண்டுவரப்பட்டது பின்பு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ முத்துமாரியம்மன் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலில் கற்பகிரகத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது, இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி


No comments:
Post a Comment