கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்டா வர சொல்லுங்க எங்க தொகுதி எம்பி எங்கேயும் காணவில்லை இப்படிக்கு கடலூர் தொகுதி மக்கள் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது இதனை பேருந்தில் செல்வதற்காக பேருந்து நிலையம் அருகே காத்திருக்கும் பொதுமக்கள் அனைவரும் கண்டு சிரித்தபடி முனுமுனுத்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் மத்தியில் உண்மையிலே கடலூர் எம்பி எந்த ஒரு அரசு நிகழ்ச்சியும் காண முடியல யாரோ கரெக்டா போஸ்டர் அடிச்சு பயங்கரமா ஒட்டி இருக்காங்க என்று பரவலாக பேசி வருகின்றனர். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொகுதியில் தற்போதைய கடலூர் மாவட்ட திமுக எம்பி ரமேஷை காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments:
Post a Comment